Monday, April 21, 2025

தங்கத்தை விடுங்க…இந்த சாக்லேட்டின் விலையை கேட்டால் ஆடிப்போயிருவீங்க

பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று சாக்லேட்..
பிறந்த நாளாக இருந்தாலும் சரி வேற எந்த விசேஷங்களாக இருந்தாலும் இபோபோதெல்லாம் நாம் சாக்லேட் கொடுத்து இன்பங்களை பகிர்ந்து கொள்வது வழக்கமாக மாறிவிட்டது..

இந்த அளவிற்கு மாறிவிட்ட சாக்லேட் வெறும் 50 கிராம் ரூ. 3,850 க்கு விற்கப்படுகின்றது.என்றால் நம்ப முடிகிறதா?

ஆமா..உலகிலேயே மிகவும் அதிக விலையில் விற்கப்படும் சாக்லேட் டோ ஆக் எனப்படுகின்றது. இது 50 கிராமின் விலை ரூ. 3,850 க்கு விற்கப்படுகின்றது.

இந்த சாக்லேடை தான் பல பணக்காரர்கள் விரும்பி சாப்பிடும் சாக்லேட்டாக உள்ளது. அது மட்டுமின்றி இதன் தனித்துவமான சுவையும் ஒரு காரணமாகும். இந்த சாக்லேட் செய்ய தேவையான கோகோவை பழங்காழ நேஷனல் கோவா மரங்களில் இருந்து எடுக்கிறார்கள்.

இந்த மரங்களில் சிலவை கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலானவை என்பதால் மக்களால் இதன் சுவை தனித்துவமாக அறியப்படுகின்றது.

இந்த சாக்லேட் செய்ய வெறும் 2 பொருட்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதில் 78% கோவா பீன்ஸ் மற்றும் கருப்பு சக்கரையும் பயன்படுத்துகின்றன. இந்த கோவா பீன்ஸ் மிகவும் கவனமாக கைகளால் எடுக்கப்பட்டு புளிக்கவைக்கப்படுகின்றது.

சுமார் 4 ஆண்டுகள் வரை இதை பீப்பாய்களில் ஒயின் போல பழுக்க வைக்கிறார்கள். இந்த சாக்லேட் தயாரிக்கப்பட பின் நேர்த்தியான கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட ஸ்பானிஷ் எல்ம் மர பெட்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

இது ஒரு வேறுவிதமான அனுபவத்தை கொடுப்பதாக சாப்பிடுபவர்கள் கூறுகிறார்கள். இதனால் தான் இதை பல பிரபலங்களால் விரும்பி உண்ணப்படுகின்றது என்கின்றனர்.

Latest news