உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க உத்தரவுகள், மத்திய அரசையும் பா.ஜ.க.வையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் காலதாமதம் செய்யக்கூடாது என விதித்துள்ள தீர்ப்பு பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து மத்திய அரசு நிறைவேற்றிய வக்பு திருத்த சட்டத்திலும் சர்ச்சைக்குரிய சில பிரிவுகளுக்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே, உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகளை மறைமுகமாக சாடியுள்ளார். “உச்சநீதிமன்றமே சட்டங்களை உருவாக்கும் எனில், நாடாளுமன்றத்தை பூட்டிவிடலாமே!” எனப் பதிவு செய்துள்ளார்.