கடந்தாண்டிற்கான உலகின் சிறந்த 100 மருத்துவமனைகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, 97வது சிறந்த மருத்துவமனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவை, மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை வழங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவின் குர்கானில் உள்ள மெதந்தா மருத்துவமனை 146வது இடத்தையும், சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவமனை 228வது இடத்தையும் பிடித்துள்ளது.