IPL வரலாற்றில் முதன்முறையாக இந்த வருடம் ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இன்னும் கோப்பை வெல்லாத டெல்லி, பஞ்சாப் அணிகள் இறங்கி அடிக்கின்றன. 5 முறை கோப்பை வென்ற சென்னை, மும்பை அணிகளின் நிலைமை பரிதாபமாக உள்ளது.
இந்தநிலையில் ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை வென்றதால், பாயிண்ட் டேபிளில் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன. இதனால் Play Offக்கு செல்லும் அணிகள் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இதன் அடிப்படையில் சென்னை, ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகளின் Play Off வாய்ப்பு, ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது.
மேலே சொன்ன 3 அணிகளும் மோசமான ரன் ரேட்டுடன், பாயிண்ட் டேபிளின் அடியில் கிடக்கின்றன. இதனால் இந்த அணிகளுக்கு இனிமேல் Play Off வாய்ப்பில்லை. நடப்பு சாம்பியன் கொல்கத்தா, கடப்பாரை டீம் என புகழப்படும் மும்பை இரண்டு அணிகளுக்கும், ஏதாவது மேஜிக் நடந்தால் மட்டுமே, Play Off சாத்தியம்.
வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் அணியில் இணைந்திருப்பதால், இனிவரும் போட்டிகளை வெல்லக்கூடிய ஆற்றல் லக்னோ அணிக்கு இருக்கிறது.
எனவே வெற்றி விகிதம் மற்றும் நெட் ரன்ரேட்டை எல்லாம் வைத்து பார்க்கும்போது டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, பெங்களூரு இந்த 5 அணிகளுக்கும் Play Off வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்றே சொல்லலாம்.