இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழுவான CERT-In தற்போது WhatsApp Desktop பயனர்களுக்கு ஒரு முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை உங்கள் கணினி பாதுகாப்புக்கு ஒரு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், இதைப் பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த பாதுகாப்பு பிரச்சினை, Windows இயங்கும் சாதனங்களில் இருக்கும் WhatsApp Desktop பதிப்புகளை பாதிக்கின்றது. குறிப்பாக, version 2.2450.6 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகள் இந்த குறைபாட்டுக்கு உள்ளாகின்றன. இந்த பிரச்சினை, தவறான “file type” மற்றும் “extension” காரணமாக ஏற்படுகிறது. இதனால், ஒரு attacker பயனாளர்களுக்கு , malicious அல்லது தீங்கிழைக்கும் கோப்புகளை அனுப்பி, அந்த கோப்புகளை ஒருவர் திறக்கும்போது, அவர்கள் கணினியின் முழு கட்டுப்பாட்டை எடுக்க முடியும்.
இதன் விளைவாக, உங்கள் கணினி பாதுகாப்பு ஆபத்துக்கு உள்ளாகிவிடும். நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், இந்த வகையான தாக்குதல்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருட்டு செய்யவும், உங்கள் கணினியை முழுமையாக எடுக்கவும் முடியும்.
இதற்கான தீர்வு என்ன? என்றால், WhatsApp நிறுவனம் ஒரு புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. நீங்கள் உங்கள் WhatsApp Desktop ஐ புதுப்பிக்க வேண்டும். அதை செய்வதன் மூலம் இந்த பாதுகாப்பு பிரச்சினை நீங்கும். மேலும், நீங்கள் முன்னப் பின்னத் தெரியாதவர்கள் அனுப்பும் சந்தேகத்திற்குரிய இணைப்புகளைத் திறக்காமல் இருக்க வேண்டும்.
புதுப்பிப்புகளை எப்போதும் சரிபார்த்து, உங்கள் கணினி மற்றும் மென்பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்பது மிக முக்கியம். இதனால், எதிர்காலத்திலான பாதுகாப்பு பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.
WhatsApp இன் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அறிவுரை பற்றி மேலதிக தகவலுக்கு, நீங்கள் WhatsApp Security Advisory-யைப் பார்க்கலாம்:
link -WhatsApp Security Advisory (https://www.whatsapp.com/security/advisories/2025).
இந்த தகவலை உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களுக்கும் இந்த பாதுகாப்பை முக்கியமாக எடுத்துக் கொள்ள உதவுங்கள்.