ராஜஸ்தானின் பூந்தி மாவட்டத்தை சேர்ந்தவர் விஷ்ணு குமார் பிரஜாபத். மண்பாண்ட தொழிலாளியான இவர் ஆண்டுதோறும் 95,000 ரூபாயை விஷ்ணு சம்பாதித்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு கடந்த மாதம் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் இருந்து நோட்டீஸ் வந்தது. அதில், ‘2020 – 21ம் நிதியாண்டில் 10.61 கோடி ரூபாய் வருமானம் பெற்றதற்கு வருமான வரி செலுத்தவில்லை’ என கூறப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள தனியார் நிறுவனம், விஷ்ணுவின் ஆதார் எண் மற்றும் பான் எண்ணை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோசடி செய்த மும்பை நிறுவனத்திடமும் விசாரணை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.