ரவுடி வெள்ளைக்காளி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்படும் அபாயம் இருப்பதாகவும், இதனால் அவரிடம் விடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட கோரியும் வெள்ளைக்காளி சகோதரி தாக்கல் செய்த மனுவில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அண்மைக் காலமாக காவல்துறையினர் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வதாக குற்றம்சுமத்தி இருக்கும் நீதிமன்றம், இதுவரை எத்தனை என்கவுன்ட்டர்கள் தமிழகத்தில் நடந்துள்ளன? என கேள்வி எழுப்பியதோடு, காவல்துறையினரின் பாதுகாப்புக்காக மட்டும்தான் துப்பாக்கி வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
குற்றவாளிகளை சுட்டுப்பிடிக்கும் காவல்துறை, அவர்களை காலுக்குக் கீழே சுட்டுப்பிடியுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது.