மியூச்சுவல் ஃபண்ட் என்பது பல முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைத் ஒன்று சேர்த்து, பங்குகள், பத்திரங்கள் போன்ற Portfolio ஒன்றில் முதலீடு செய்யும் ஒரு முதலீட்டுத் திட்டம். இதன் சிறப்பே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலம், சிறிய முதலீட்டாளர்களும் கூட, பெரிய முதலீட்டாளர்களைப் போல பலதரப்பட்ட முதலீட்டு வாய்ப்புகளைப் பெற முடிகிறது என்பதே.
குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு நல்ல முதலீடு திட்டமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சராசரியாக வருடத்திற்கு இந்த SIP திட்டத்தின் மூலமாக 12 சதவீதம் வருமானம் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. குறைந்தது இந்த திட்டத்தின் கீழ் ரூ. 100 முதல் முதலீடு செய்ய துவங்கலாம் என்பது Plus Point. இந்த திட்டத்தில் உதாரணமாக முதல் ஆண்டில் மாதம் ரூ. 500 முதலீடு செய்தால் அடுத்த ஆண்டில் 10 சதவீதம் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும் என்பது விதிமுறை.
அதாவது, இரண்டாவது ஆண்டில் ரூ. 550 முதலீடு செய்ய வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் 10 சதவீதம் கூடுதலாக முதலீடு செய்து வந்தால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு 12 சதவீத வட்டியுடன் ரூபாய் 44 லட்சத்து 17 ஆயிரத்து 62 தொகை கிடைக்கும். மேலும், இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் கூடுதலாகவும் முதலீடு செய்து அதிக வருமானத்தை பெற முடியும். எனவே, எதிர்கால தேவைக்காக சேமிக்க விரும்பும் இளம் தலைமுறையினர் இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் இணைந்து பயனடையலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்பதால் திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.