இந்தியாவில் கோடிக்கணக்கான ஊழியர்கள் பிஎஃப் திட்டத்தின் கீழ் தங்களது எதிர்காலத்துக்கான சேமிப்பை உருவாக்கி வருகின்றனர். அவர்கள் வேலை செய்து வரும் காலத்திலேயே, அவசர தேவைகளுக்காக அந்த PF பணத்தை advance-ஆக எடுக்க முயற்சி செய்வது சாதாரணமான விஷயமாகி விட்டது. ஆனால் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் நிலை இருந்தது. இப்போது அதில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பணத்தை எடுக்க முன்பு வங்கி கணக்கின் காசோலை, அதாவது cancelled cheque அல்லது passbook upload பண்ணனும் என்பது கட்டாயமாக இருந்தது. இப்போது அது தேவையில்லை. EPFO அமைப்பு இந்த கட்டுப்பாட்டை நீக்கியிருப்பது பலருக்கு நிவாரணமாக இருக்கிறது. இதற்கான காரணம், PF பணம் நேரடியாக ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குக்கே வருவதால், காசோலையின் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் நல்ல விஷயம்தான், ஆனாலும் PF advance பெறும் முயற்சி வெற்றியடைய, ஒரே ஒரு விஷயம் மிகவும் முக்கியம். அது உங்கள் பெயர். PF கணக்கில் உள்ள பெயர், ஆதார், பான், வங்கி கணக்குகளில் உள்ள பெயர் — இவை எல்லாம் ஒரே மாதிரியான spelling-ல, ஒரே மாதிரியான initial-ல இருக்க வேண்டும். இதில ஏதாவது mismatch இருந்தால், உங்கள் claim reject ஆகும். குறிப்பாக பான் கார்டில் உள்ள பெயரை மாற்ற முடியாததால், ஆதாரில் இருந்தே மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்.
PF advance எடுக்க முடியுமா என்று பார்ப்பதற்கு முன், உங்கள் PF contribution-ஐ தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது உங்கள் employee contribution தொகைதான் முக்கியம். அந்த தொகையின் 50 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாகத்தான் advance கேட்க வேண்டும். ஒரு எடுத்துக்காட்டு சொல்லனும்னா, உங்கள் contribution ₹60,000 இருந்தா, அதிகபட்சம் ₹30,000 மட்டும் தான் advance-ஆ கேட்க முடியும். இதை மீறி ₹40,000, ₹50,000 மாதிரி கேட்டீங்கனா, அந்த விண்ணப்பம் 15-20 நாட்களில் நிராகரிக்கப்படும்.
பொதுவாக, PF advance எந்த காரணத்துக்காக வேண்டுமென்றும் முக்கியம். மருத்துவ அவசரத்துக்காக எதுநாளும், எத்தனை முறை வேண்டுமானாலும் advance எடுக்கலாம். அதற்கான கட்டுப்பாடுகள் இல்லை. ஆனா வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற காரணங்களுக்கு advance பெற, குறைந்தது ஐந்து வருடம் பணியாற்றி இருக்க வேண்டும்.
இதில் இன்னொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், தற்போதுள்ள நிறுவனத்தின் கீழ் PF பணம் இருக்க வேண்டும். பழைய நிறுவன PF தொகைகள் எல்லாம் transfer ஆகி இருக்க வேண்டும். அந்த பணம் இன்னும் transfer ஆகவில்லை என்றால், விண்ணப்பம் reject ஆகும். இந்த transfer-க்கு 15 நாட்கள் வரை ஆகும்.
எல்லாமே சரியாக இருந்தால், PF advance form 31-ஐ select பண்ணி, அதில் தேவையான category-யை தேர்வு செய்து, online-லேயே விண்ணப்பிக்கலாம். எவ்வளவு தொகை இருக்கிறது, எவ்வளவு கேட்கலாம் என்பதை PF passbook-ஐ பார்த்து தெரிந்துகொள்ளலாம். இப்படி எல்லாமே சரியாக இருந்தா, எந்த rejection-மும் இல்லாமல், உங்கள் வங்கி கணக்கில் நேரடியாக PF பணம் வந்து சேரும்.
இது உங்கள் உரிமை. மத்திய அரசு உருவாக்கிய திட்டம். அதனால எந்த broker-ம், middleman-ம் வேண்டாம். நீங்களே உங்கள் PF portal-ல login பண்ணி பணத்தை கேட்டு வாங்கிக்கலாம். இனிமே PF advance எடுக்குறது ஒரு சுலபமான விஷயம்தான்.