Saturday, August 2, 2025
HTML tutorial

‘வந்துட்டான்டா’ என் சிங்கக்குட்டி ஹேப்பி மோடில் LSG ‘கோயங்கா’

IPL தொடரின் Strict ஓனர் என்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின், சஞ்சீவ் கோயங்காவை தாராளமாகச் சொல்லலாம். 2 வருடம் முடிந்து 3வது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ள லக்னோவின், கேப்டன் பொறுப்பை ஏற்பதற்கு இனிமேல் யாரும் முன்வர மாட்டார்கள்.

ஏனெனில் கோயங்காவின் குணம் அப்படி. கோயங்கா செய்த டார்ச்சரில், முன்னாள் கேப்டன் கேஎல் ராகுல்  பெட்டி, படுக்கையுடன் டெல்லிக்கே சென்று செட்டிலாகி விட்டார். தற்போது நடப்பு கேப்டன் ரிஷப் பண்ட், கோயங்காவிடம் மாட்டிக்கொண்டு படாதபாடு படுகிறார்.

7 போட்டிகளில் ஆடியிருக்கும் லக்னோ 4 வெற்றி 3 தோல்விகளுடன், பாயிண்ட் டேபிளில் 5வது இடத்தில் உள்ளது. இதனால் மீதியிருக்கும் போட்டிகளில் குறைந்தபட்சம், 4 போட்டிகளையாவது வெல்ல வேண்டிய கட்டாயத்தில் லக்னோ உள்ளது.

இந்தநிலையில் அந்த அணிக்கு Boost சேர்ப்பது போல, அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் அணியில் இணைந்திருக்கிறார். காயத்தால் IPLன் முதல் பாதி தொடரை மயங்க் மிஸ் செய்தார். இதுவும் அணியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாகும்.

தற்போது மயங்க் ரீ-என்ட்ரி கொடுத்திருப்பதால், கோயங்கா, ”வந்துட்டான்டா என் சிங்கக்குட்டி. இனிமே எங்க ஆட்டம் வேற மாதிரி இருக்கும்,” என்று செம ஹேப்பி மோடில் இருக்கிறாராம். 22 வயதாகும் மயங்க், கடந்த தொடரில் 156 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பந்துவீசி, எதிரணி வீரர்களை நிலைகுலையச் செய்தவர்.

இதனால் நடப்பு தொடரிலும் அவரின் விக்கெட் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது. லக்னோ அடுத்ததாக ராஜஸ்தான் அணியை, ஏப்ரல் 19ம் தேதி ஜெய்ப்பூரின் Sawai Mansingh ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது.

மயங்கின் வருகை லக்னோவை வெற்றிப்பாதைக்கு திருப்புமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News