‘கனா காணும் காலங்கள்’ தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஸ்ரீராம். படங்களில் நடிக்க ஆரம்பித்த போது, தனது பெயரை ஸ்ரீ என்று மாற்றிக் கொண்டார். வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம், இறுகப்பற்று உள்ளிட்ட படங்களில், வித்தியாசமான வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர்.
சமீபகாலமாக இவர் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்தநிலையில் 37 வயதாகும் நடிகர் ஸ்ரீ, ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மெலிந்து போய் இருக்கும், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதைப்பார்த்த ரசிகர்கள், ” எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு”, யாராச்சும் அவருக்கு கொஞ்சம் Help பண்ணுங்கப்பா,” என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இன்னும் ஒருசிலர் இயக்குனர் லோகேஷ் கனகராஜை Tag செய்து, ”கொஞ்சம் அவருக்கு உதவி செய்ங்க சார்” என்று, உருக்கத்துடன் பதிவிட்டு இருக்கின்றனர்.
பிக்பாஸ் முதல் சீசனில் முதல் போட்டியாளராக உள்ளே சென்ற ஸ்ரீ, 4 நாட்களில் அங்கிருந்து வெளியேறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.