Saturday, April 19, 2025

மாருதி சுசுகியின் Fronx மாடலுக்கு ரூ.1 லட்சம் வரை சலுகை..!!

இந்தியாவில் கார்கள் விற்பனையில் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் மாருதி சுசுகி நிறுவனம், தனது மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றான ஃப்ரான்க்ஸ் (Fronx) க்கு தற்போது வசதியான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

நீங்கள் மாருதி சுசுகியின் Fronx மாடலை வாங்க திட்டமிட்டு, நல்ல சலுகைக்காகக் காத்திருந்தால், இதுவே சிறந்த நேரம். சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, கிட்டத்தட்ட ரூ.1 லட்சத்திற்கான சலுகைகளை வழங்குகிறது.

இந்த சலுகை ஸ்டாக் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து 2025, ஏப்ரல் மாதம் இறுதி வரை செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ளவும். அதேபோல இது நகரத்திற்கு நகரம் மாறுபடும். Fronx மாடலை வாங்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் சலுகைகள் பற்றிய விரிவான தகவலுக்கு அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்பைப் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மாருதி சுசுகியின் ஃப்ரான்க்ஸ் ரூ.7.52 லட்சம் என்ற தொடக்க விலையில் வருகிறது. அதே நேரத்தில் இந்த மாடலின் டாப் வேரியன்ட் எக்ஸ்-ஷோரூம் விலைரூ.12.88 லட்சமாக உள்ளது. மேலும், இது 10-க்கும் மேற்பட்ட வேரியன்ட்ஸ்களில் வழங்கப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப டிரிம்ஸ்களை தேர்வு செய்ய முடியும்.

Latest news