அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடுத்தடுத்து சீனாவுக்கு வரி மேல் வரி விதித்து வருகிறார். சீனாவும் பதிலுக்கு வரி போட துவங்கியது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரிகளை 145 சதவீதமாக உயர்த்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை 125 சதவீதமாக சீனாவும் உயர்த்தியது.
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து கூடுதல் வரிகளை விதித்தால், சீனா அதைப் புறக்கணிக்கும்’ என்றும் சீன நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.