மத்திய அரசு தற்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு e-KYC நடைமுறையை கட்டாயமாக்கியுள்ளது. இதை பூர்த்தி செய்யாவிட்டால், ரேஷன் கார்டில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் பெற முடியாது.
e-KYC ஆனது, தவறான முறையில் ரேஷன் பொருட்கள் வாங்குபவர்களை அடையாளம் காண உதவும். போலி ரேஷன் அட்டைகள் மற்றும் கள்ளச் சந்தைப்படுத்தல்களை தவிர்க்கவும் இது முக்கியமாகிறது. இதன் மூலம் ரேஷன் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையும், நம்பகத்தன்மையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமில்லாமல் தமிழக அரசு இப்போது e-KYC பூர்த்தி செய்ய வேண்டிய கடைசி தேதி ஜூன் 30, 2025 ஆக அறிவித்துள்ளது. இன்றே இந்த செயல்பாட்டை பூர்த்தி செய்துகொள்வது அவசியம். இல்லையெனில், உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்.
e-KYC செயல்முறையை பூர்த்தி செய்ய, இதோ சில எளிய படிகள்:
1. முதலில் உங்கள் தொலைபேசியில் Mera eKYC App மற்றும் AadharFaceRD App என்ற இரண்டு செயலிகள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
2. பிறகு, Mera eKYC செயலியில் உங்கள் மாநிலத்தை தேர்ந்தெடுத்து, உங்கள் உள்ளூரை உள்ளிட்டு சரிபார்க்கவும்.
3. அடுத்ததாக, உங்கள் ரேஷன் கார்டில் உள்ள ஆதார் எண்ணை செயலியில் உள்ளிடவும்.
4. உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு OTP (One-Time Password) அனுப்பப்படும். அந்த OTP-ஐ செயலியில் உள்ளிடவும்.
5. பிறகு, முகத்தை வெரிஃபை செய்ய வேண்டும். முக ஸ்கேனிங் செய்ய உங்கள் செல்போன் கேமராவை பயன்படுத்தி, எளிதாக முகத்தை ஸ்கேன் செய்யவும்.
6. பிறகு, உங்கள் சரிபார்ப்பு முடிந்துவிடும். உங்கள் ரேஷன் கார்டில் பட்டியலிடப்பட்ட ஒவ்வொரு உறுப்பினருக்கும் இந்த செயல்முறை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், அவர்கள் பெயர் கார்டில் இருந்து நீக்கப்படும்.
e-KYC இணையத்தில் பூர்த்தி செய்ய முடியாதவர்கள், அருகிலுள்ள ரேஷன் கடைக்குச் சென்று, அதற்குரிய ஆவணங்களை எடுத்துச் செல்லவும். அங்கு, கடைக்காரர் உங்கள் ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டு எண்ணை உள்ளிட்டு, உங்கள் பயோமெட்ரிக்ஸ் மூலம் KYC பூர்த்தி செய்வார்.
இந்த e-KYC செயல்முறை ரேஷன் கார்டின் அத்தியாவசிய சேவைகளை பெற எந்த சிக்கலுக்கும் இடமில்லாமல் பயன்படுகிறது. அதனால், தாமதமாகாமல், இன்றே இந்த வேலை முடித்து விடுங்கள்.