“இந்த பர்சனல் லோன், வீட்டு கடன், நகை கடன் எல்லாம் இருக்கறதால தான் நம்மை மாதிரி சாமானிய மக்கள் ஏதோ கொஞ்சம் சொத்து சேர்த்து வைக்க முடியுது…” என்று நிம்மதி பெருமூச்சு விடும் நடுத்தர மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஏன்… பல நேரங்களில் நாமே கூட அப்படித்தான் நகை, வீடு என்று வாங்கி போட்டிருப்போம்.
இந்நிலையயில் இந்திய ரிசர்வ் வங்கி அதாவது RBI, EMI செலுத்துவதில் வீட்டு லோன், Personal லோன், Gold லோன் உட்பட 3 வகையான லோன்-களின் அடிப்படை விதிகளை மாற்றி அமைத்திருக்கிறது. அந்த 3 மாற்றங்கள் எவையென்பதை குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு சூப்பரான Good News ஒன்றை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. பலரும் இப்படி ஒன்று நடந்தால் நன்றாய் இருக்குமே என்று காத்திருந்த நிலையில் வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கிறது. தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக அறிவித்துள்ளது. அதாவது இது 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 11 முறை இதில் மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது குறைக்கப்பட்டிருப்பது மக்களுக்கு குளுகுளு செய்தியாகவே இருக்கிறது.
அடுத்ததாக பர்சனல் லோன் வழங்குபவர்கள் கடன் காலத்தை அதிகரிப்பதற்கு முன் கடனாளியின் ஒப்புதலைப் பெற வேண்டும். வட்டி விகித உயர்வு காரணமாக EMI அல்லது காலவரையறையில் மாற்றம் இருந்தால் அதனை தெளிவாகத் விளக்க வேண்டும். கடன் வாங்குபவர்கள் கடன் வழங்கப்படுவதற்கு முன் முழுமையான கடன் விவரங்களுடன் ஒரு முக்கிய உண்மை அறிக்கையை அதாவது KFS பெற வேண்டும். கடன் வாங்குபவரின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையான EMI அதிகரிப்பு அல்லது கால நீட்டிப்புகள் செய்ய இனி அனுமதி கிடையாது. முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் இன்னமும் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். கடன் அறிக்கைகளில் வட்டி மற்றும் மற்ற விதிகள் பற்றிய விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். இதற்கு முன்பு இப்படிப்பட்ட விதிமுறைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக தங்க நகை கடன் விதிமுறைகள் கடனளிப்பவரின் risk managementஐ அடிப்படையாக வைத்தே Gold லோன் கொடுக்கப்பட வேண்டும். தங்கத்தின் தரம் எப்படி உள்ளது, அதன் தூய்மை தன்மை எப்படி இருக்கிறது என்பதை மதிப்பிட்ட பின்பே தங்க கடன் வழங்கப்பட வேண்டும் என்று RBI தெரிவித்துள்ளது. மேலும் முறையான கடன் மதிப்பீடு செய்த பின்பே தங்க கடனை வழங்க வேண்டும் என்றும் கடன் வழங்குபவர்கள் தங்கத்தின் பின்புலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. திருட்டு நகைகள் அடகு வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பது கவனம் பெறுகிறது. மட்டுமல்லாமல் தங்க நகை கடன் புதுப்பித்தல்கள் மற்றும் டாப்-அப்கள் தங்க நகையின் மதிப்பிற்குள் இருந்தால் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்பன போன்ற மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.