Saturday, April 19, 2025

தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்ட டிரம்ப்! இதெல்லாம் தேவையா ?

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், அதன் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான டேட்டா சென்டர் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த முடிவுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விதித்த வரிகளும், செலவு உயர்வுகளும் முக்கிய காரணமாக இருக்கின்றன. 

இந்த திட்டம், ஓஹியோ மாநிலத்தில் புதிய கட்டுமான வேலைகளை உருவாக்கி உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிக்க இருந்தது. ஆனால், மைக்ரோசாஃப்ட் இப்போது இந்த திட்டத்தை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், வரி அதிகரிப்பு, தொழில்நுட்ப உபகரணங்களின் விலை உயர்வு போன்றவை நிறுவனங்களின் நிதிச் சுமையை அதிகரித்துள்ளன.

அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா, தைவான், தென் கொரியா போன்ற நாடுகளிடமிருந்து வரும் உயர் தொழில்நுட்ப உபகரணங்களின் மீது அதிக இறக்குமதி வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, இதே வரிகள் மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களுக்கு நிதி சுமையை அதிகரித்துள்ளது. இதனால், தரவு மையங்களை உருவாக்கும் திட்டங்களில் பெரும்பாலான செலவுகள் மேலும் அதிகரித்து, பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது தங்கள் செலவுகளை மறுசீரமைப்பதைத் தொடங்கியுள்ளன.

இந்த திட்டம், 700 மில்லியன் டாலர் கட்டுமான செலவுகளையும், 300 மில்லியன் டாலர் இயந்திரச் செலவுகளையும் தேவைப்படுத்தியது. மேலும், இதன் மூலம் 400 கட்டுமான வேலைகள் மற்றும் நூற்றுக்கணக்கான முழு நேர வேலைகள் உருவாக வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.

அது போன்று, மேம்படுத்தப்பட்ட நிலத் திட்டங்களின் மூலம், மைக்ரோசாஃப்ட் புதிய வளர்ச்சியைக் கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகளை பரிசீலிக்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

இப்படியிருக்கும் சூழலில் டிரம்ப் மேற்கொண்ட வரி விதிப்பு மற்றும் வர்த்தகப் போரின் விளைவாக, அமெரிக்காவில் ஏற்படவிருந்த வளர்ச்சியை தனக்குத் தானே சூனியம் செய்து தடுத்து நிறுத்தியிருப்பது பரவலான கண்டனங்களை  பெற்று வருகிறது.

Latest news