எஸ்பிஐ வாடிக்கையாளர்களே கவனமா இருங்க! மே 1 முதல் உங்கள் ATM பரிவர்த்தனை விதிகளில் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றது .
இனிமேல், ஸ்டேட் வங்கி ATM-களில் மாதத்திற்கு 10 இலவச பரிவர்த்தனைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். அதே நேரத்தில், பிற வங்கிகளின் ATM-களில் மாதத்திற்கு 5 இலவச பரிவர்த்தனைகள் மட்டுமே வழங்கப்படும்.
இந்த இலவச வாய்ப்புகளை பெற, உங்கள் வங்கி கணக்கில் சராசரியாக மாதத்திற்கு குறைந்தது ₹25,000 முதல் ₹50,000 வரை இருப்பு இருக்க வேண்டும்.
ஆனால், ஒருவருடைய மாதாந்திர சராசரி இருப்பு ₹1 லட்சத்தைத் தாண்டினால், எஸ்பிஐயும் பிற வங்கிகளும் சேர்ந்து வரம்பற்ற இலவச ATM பரிவர்த்தனைகளை பயன்படுத்த முடியும்!
இலவச வரம்பு முடிந்த பிறகு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஸ்டேட் வங்கி ATM-ல் — ₹15 + GST யும்,
பிற வங்கிகளின் ATM-ல் — ₹21 + GST யும் வசூலிக்கப்படுகிறது.
மே 1 முதல், இலவச வரம்பை மீறிய பிறகு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ₹23 + GST வரை கட்டணம் கட்ட வேண்டி இருக்கலாம்.
இருப்பினும், இலவச வரம்பு முடிந்தபின் கூட, மினி ஸ்டேட்மென்ட் பார்க்கவோ, கணக்கு சரிபார்க்கவோ கட்டணம் வசூலிக்கப்படாது – இது ஒரு நல்ல விஷயம்!
ஆனால், உங்கள் சேமிப்பு கணக்கில் போதுமான இருப்பு இல்லாமல் ATM பரிவர்த்தனை செய்ய முயன்றால், ₹20 + GST அபராதம் விதிக்கப்படும் என்பதை மறக்காதீங்க.
இதனால் என்ன தெரியுது? – உங்கள் மாதாந்திர சராசரி இருப்பை பராமரிக்கவும், அவசியமற்ற ATM பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும் முக்கியமான நேரமிது!