Saturday, April 19, 2025

குடும்ப அட்டைதாரர்களுக்கு Happy நியூஸ்! மாவட்ட கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! குறிக்கப்பட்ட நாள்!

“இந்த ரேஷன் Card-ல ஏதாவது திருத்தம் செய்யணும்-னா சட்டுன்னு வேலை முடிய மாட்டேங்குது… இழுத்தடிக்குது…” என்று அலுத்துக்கொள்பவர்களுக்கு ஒரு Good News. திருத்தம் செய்ய நீங்கள் எங்கும் சென்று அலையத்தேவையில்லை. குடும்ப அட்டையில் உங்கள் குழந்தைகளின் பெயரை சேர்க்க அல்லது குடும்ப அட்டையில் அதாவது ரேஷன் கார்டில் ஒருவரது பெயரை நீக்க அல்லது ரேஷனில் பொருட்கள் விநியோகம் தொடர்பான ஏதேனும் குறைகள் பற்றி புகார் தெரிவிக்க வேறு மண்டலம் போகிறீர்கள் என்றால் அதைப் பற்றிய தகவலை Update செய்ய மற்றும் ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து குறைகளுக்கும் உடனடியாக தீர்வு காண வரும் ஏப்ரல் 12ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அறிவித்துள்ளார்.

ஆன்லைனிலும் குடும்ப உறுப்பினர்களை சேர்ப்பது அதேபோல் குடும்ப உறுப்பினர்களை நீக்குவது போன்றவற்றை செய்ய முடியும். உங்கள் வீட்டு Gas Bill-ஐ மட்டுமே வைத்து கூட ஏரியா விட்டு ஏரியா மாறினாலும் ரேஷன் கார்டை எந்த ஒரு இசேவை மையத்தில் கொடுத்து ஒரு வரத்திற்குள்ளாகவே மண்டலத்தை மாற்றிக்கொள்ள முடியும்.

ஆனால் ஆன்லைன் செயல்முறைகளை பற்றி தெரியாத மக்களுக்காக அரசு ஒவ்வொரு மாதமும் முகாம் நடத்தி சேவைகளை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறது. வெறும் மனுக்களை வாங்கி திருத்தங்கள் செய்வது மட்டுமல்லாமல் குறைகளையும் கேட்டு அவற்றுக்கான தீர்வையும் செய்து தருகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் வரும் 12ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் தேனி மாவட்டத்தில் உள்ள 5 தாலுகா பகுதிகளிலும் நடைபெறவிருக்கிறது. பெரியகுளம் தாலுகாவில் வடுகபட்டி, தேனி தாலுகாவில் ஊஞ்சாம்பட்டி, ஆண்டிப்பட்டி தாலுகாவில் வாலிப்பாறை, உத்தமபாளையம் தாலுகாவில் கருநாக்கமுத்தன்பட்டி, போடி தாலுகாவில் காமராஜபுரம் ஆகிய இடங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், கடை மாற்றம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news