தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளனர். நடிகர் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலை சந்திக்க உள்ளதால் வரப்போகும் தேர்தல் மீது அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தனது முதல் வேட்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்தி போட்டியிடுகிறார். நாளை நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுக கலந்தாய்வு கூட்டத்தில் இடும்பாவனம் கார்த்தி அறிமுகப்படுத்தப்படுகிறார்.