பால் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து கர்நாடக பா.ஜ.க சார்பில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்த்தில் மாநில தலைவர் விஜயேந்திரா, பாஜக மூத்த தலைவர் பி.எஸ்.எடியூரப்பா மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.
எடியூரப்பாவிடம் போராட்டத்தை கைவிடுமாறு போலிசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்க மறுத்ததால் எடியூரப்பா உள்பட கட்சி நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.