Thursday, January 15, 2026

ஆவேசமாக கத்திய செங்கோட்டையன்…அதிர்ந்து போன அதிமுக எம்.எல்.ஏக்கள்

தமிழக சட்டசபையில் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொண்டுவந்தார். அப்போது காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உரையாற்றிக் கொண்டிருந்த போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை பேசினார்.

இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும்விதமாக எழுந்து பேசிய செங்கோட்டையன், ஜெயலலிதாவை விமர்சிக்கும்போது பார்த்துக்கொண்டு சும்மா இருக்கலாமா? என்று அதிமுக எம்எல்ஏக்களை பார்த்து ஆவேசமாக கத்தினார்.

இதையடுத்து சுதாரித்துக்கொண்ட அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து செல்வப்பெருந்தகை பேச்சுக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து ஜெயலலிதாவை குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை பேசிய விஷயங்கள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.

Related News

Latest News