Friday, July 4, 2025

ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும்- இந்திய வானிலை ஆய்வு மையம்

நாட்டின் பல பகுதிகளில் கோடை வெயில் வாட்டி எடுக்கிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சில இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் இயல்பை விட அதிகமான வெப்ப அலை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news