இளைஞர் ஒருவர் ஒரே மேடையில் 2 பெண்களை கரம்பிடித்த சுவாரஸ்ய சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் கோமரம் பீம் ஆசியாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் சூர்யதேவ். இவரை லால்தேவி, ஜல்காரி தேவி ஆகிய 2பெண்களும் காதலித்துள்ளனர். இதனையடுத்து ஊர்மக்களின் சம்மதத்தின் பெயரில், 2 பெண்களையும் சூர்யதேவ், ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டார்.
ஒரே திருமண அழைப்பிதழில் 2 பெண்களின் பெயர்களும் அச்சிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், மணமகனின் கையை பிடித்து 2 பெண்களும், திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.