கவுன்ட்டரில் எடுத்த ரயில் டிக்கெட்டை ஆன்லைன் மூலம் ரத்து செய்யலாம் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டிக்கெட் கவுன்ட்டரில் காத்திருப்போா் பட்டியல் டிக்கெட்டை வாங்கியவா்கள், இருக்கை உறுதியாகாத நிலையில், மீண்டும் கவுன்ட்டருக்கு சென்று அதனை ரத்து செய்யவேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டை ஆன்லைன் மூலம் ரத்து செய்யலாம் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். IRCTC இணையதளம் அல்லது 139 எண்ணுக்கு அழைத்து கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டுகளை ரத்து செய்யலாம் என கூறியுள்ளார்.