மியான்மர்-தாய்லாந்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. குறிப்பாக மியான்மரில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடந்தன.
தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தலைநகர் பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்டு வந்த 33 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
தற்போதைய நிலவரப்படி அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 694 பேர் இறந்துள்ளதாகவும், 1,670 பேர் காயமடைந்துள்ளதாகவும் மியான்மரின் ஆளும் இராணுவ ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது.