Wednesday, April 2, 2025

“பெயரை மட்டும் வீராப்பா சொன்னா பத்தாது” – மு.க ஸ்டாலின் குறித்து தவெக விஜய் பேச்சு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது பொதுக் குழுக் கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகின்றன.

இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது : அரசியல் என்றால் என்ன? ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழணும் என்று நினைப்பது அரசியலா? இல்லை ஒரே ஒரே குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழணும் என்று நினைப்பது அரசியலா? எது அரசியல்? எல்லாரும் நடக்கும் என்பது தான் அரசியல். அதுதான் நம் அரசியல்.

மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே…. மாண்புமிகு திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே…பெயரை மட்டும் வீராப்பா சொன்னா பத்தாது. செயலையும், ஆட்சியிலும் அதை காட்டணும் அவர்களே…

ஒன்றியத்தில் பாஜக அரசை பாசிச அரசு என்று அடிக்கடி அறிக்கைகள் வெளியிட்டு விட்டு நீங்க பண்றது என்னவாம். அதுக்கு கொஞ்சம் கூட குறைவில்லாத பாசிச ஆட்சிதானே. இவ்வாறு அவர் பேசினார்.

Latest news