குஜராத்தில் பள்ளிகள் மூடப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ கிரித் படேல் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த கல்வித் துறை அமைச்சர் அதுபற்றிய தரவுகளை பேரவையில் சமர்ப்பித்தார்.
குஜராத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மாணவர்கள் வருகைப் பதிவு குறைவு காரணமாக 33 மாவட்டங்களில் உள்ள அரசின் 54 தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது. மேலும், பாழடைந்த பள்ளிக் கட்டடங்களை இடித்து புதிய பள்ளிக் கூடங்கள் கட்டுவதற்கு போதிய இடமில்லை என்றும் பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மொத்தமுள்ள 32,000 பள்ளிகளில் 1,606 பள்ளிகள் வெறும் ஒரு ஆசிரியருடன் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலையில் இருக்கிறது.