Saturday, April 19, 2025

அரசுமுறை பயணமாக இந்தியா வருகிறார் சிலி அதிபர்

பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, சிலி அதிபர் கேப்ரியல் போரிக் வருகிற 1ம் தேதி இந்தியா வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பயணம், இருதரப்பு உறவுகள் பற்றிய விரிவான மறுபரிசீலனையை மேற்கொள்வதற்கும், சர்வதேச பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் வாய்ப்பளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின்போது அதிபர் போரிக், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவையும் சந்தித்து பேசுவார் என கூறப்பட்டுள்ளது.

Latest news