விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாக இருந்தது. இதனிடையே OTT உரிமம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் படத்தை வெளியிட தடை செய்யப்பட்டது.
இதையடுத்து பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு நேற்று மாலை படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
தற்போது படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் ரூ.3.25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.