உத்தர பிரதேசம் மாநிலம் சாந்த்கபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பப்லு (வயது 30,) இவரது மனைவி ராதிகா (28) இவர்கள் இருவருக்கும் கடந்த 20217-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராதிகாவுக்கு ஏற்கனவே தனது கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்துள்ளார்.
கணவன் இல்லாத நேரத்தில் தனது காதலனை ரகசியமாக சந்தித்து வந்துள்ளார் ராதிகா. இந்த விஷயம் கணவருக்கு தெரிய வர பல முறை ராதிகாவை கண்டித்துள்ளார். ஆனால் ராதிகாவோ காதலனை என்னால் மறக்க முடியாது.அவர் இல்லாமல் நான் உயிருடன் இருக்கமாட்டேன் என கூறியுள்ளார்.
இதனால் வேறு வழி இல்லாமல் மனைவி நிம்மதியாக காதலனுடனே சேர்ந்து வாழட்டும் என்று முடிவு எடுத்த பப்லு, அங்குள்ள ஒரு கோவிலில் குழந்தைகள், மற்றும் உறவினர்கள் பெரியவர்கள் முன்னிலையில் தனது மனைவியை காதலனுடன் அனுப்பிவைத்துள்ளார்.