காஷ்மீரில் முதல் முறையாக நேரடி ரெயில் சேவை தொடங்கவுள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த புதிய ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
இந்த புதிய ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்குவார். நிகழ்வில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் மாநில முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.