இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் மாருதி சுசுகிக்கு, அரியானா மாநிலத்தில் 2 ஆலைகள் உள்ளன. இந்த நிலையில், 7 ஆயிரத்து 410 கோடி ரூபாய் செலவில், 3வது ஆலையை அமைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் ஆலை அமைக்கப்படும் என்றும், ஏற்றுமதி உள்ளிட்ட சந்தை தேவையின் வளர்ச்சி காரணமாக 3வது ஆலை அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.