Saturday, December 27, 2025

மலையாள சினிமா கண்டிராத வசூல் வேட்டையை நடத்திய எம்புரான்

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘லூசிஃபர்’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதற்கு L2 எம்புரான்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படம் நாளை ( மார்ச் 27) வெளியாகவுள்ளதால் கேரளத்தில் பல திரையரங்குகளில் டிக்கெட்கள் முன்பதிவு வாயிலாக விற்றுத்தீர்ந்துள்ளன.

இந்த நிலையில், லூசிஃபர் 2: எம்புரான் முன்பதிவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முன்பதிவில் மட்டுமே ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மலையாள சினிமாவில் முன்பதிவில் அதிக வசூல் செய்த முதல் படம் இதுவாகும்.

Related News

Latest News