Friday, July 4, 2025

மனோஜ் பாரதிராஜா உடலுக்கு விஜய் நேரில் சென்று அஞ்சலி

இயக்குனர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். இது திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவரது மறைவுக்கு திரையுலகினரும், அரசியல் பிரபலங்களும் சமூக வலைதளங்களில் இரங்கலை தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் மனோஜின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் மனோஜ் உடலுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் சிவக்குமார், பிரபு, சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் நேரில் சென்று மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news