தேர்தல் விதிகளை கடுமையாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இனி அடுத்து நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்களில் குடியுரிமைச் சான்று கட்டாயம் என அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முந்தைய அமெரிக்க அரசு தேர்தல் நடத்துவதில் தேர்தல் பாதுகாப்பை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு குடியுரிமை அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், குடியுரிமை அல்லாமல் வாக்களிப்பது சட்டவிரோதமானது என்றும், அவர்கள் நாடு கடத்தப்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்கக்கூடும் என்று வாக்காளர்களுக்கான உரிமைக் குழுக்கள் கவலை தெரிவித்துள்ளன.