Tuesday, April 1, 2025

ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி கைது

டெல்லி தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக காண்டிராக்டை முடித்து கொடுப்பதற்காக ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்டதாக நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி உள்பட 4 பேரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொது மேலாளர் ராம்பிரித் பஸ்வான் மற்றும் நெடுஞ்சாலைத் துறையை சேர்ந்த மேலும் 6 உயர் அதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இதையடுத்து ராம்பிரித் பஸ்வான், தனியார் நிறுவன அதிகாரி உள்பட 4 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். இவர்களது காண்டிராக்ட் சம்பந்தப்பட்ட இடங்கள், அலுவலகங்களில் சோதனை நடத்தி ரூ.1.18 கோடி பணம் பறிமுதல் செய்து உள்ளனர்.

Latest news