Tuesday, April 22, 2025

நடிகருக்கு சொந்தமான ஓட்டலை சூறையாடிய ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள்

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என்று குறிப்பிட்ட காமெடி நடிகர் குணால் கம்ரா சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஏக்நாத் ஷிண்டேவைவை விமர்சித்த நடிகர் குணால் கம்ராவுக்கு சொந்தமான ஓட்டல் மீது சிவசேனா கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த தெரிவித்த நகைச்சுவை நடிகர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கிருஷ்ணா ஹெக்டே வலியுறுத்தி உள்ளார். மேலும், காமெடி நடிகருக்கு சிவசேனா டிரீட்மென்ட் தரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “குணால் கம்ராவின் கருத்துக்கள் மிக மோசமாக உள்ளன. அவர் விமானங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest news