Tuesday, April 22, 2025

சத்தீஷ்கரில் உள்ள ஒரு கிராமத்திற்கு 77 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார வசதி

சத்தீஷ்கரில் உள்ள டைம்னர் என்ற கிராமத்திற்கு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளுக்குப் பின்னர் மின்சார வசதி கிடைத்துள்ளது.

சத்தீஷ்கார் மாநிலம் நக்சலைட் பயங்கரவாதிகள் தாக்குதல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாகும். இங்கு பிஜபூர் மாவட்டத்தில் உள்ள டைம்னர் கிராமம், நீண்டகாலம் நக்சலைட்டுகளின் ஆக்கிரமிப்பில் இருந்தது. இங்கு தற்போது 53 வீடுகளே உள்ளன. இந்த கிராமத்தில் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே மின்சாரம் கிடையாது. மின்சாரம் கொண்டு செல்லும் முயற்சிகளுக்கு நக்சலைட்டுகள் முட்டுக்கட்டையாக இருந்தனர்.

தற்போது இந்த பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் ஒடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான மறுவாழ்வு திட்டமும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம், சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ”மஞ்ச்ரா-டோலா” என்ற திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில். அம்மாநில முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய், டைம்னர் கிராமத்திற்கு மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை தொடங்கி வைத்து உள்ளார். இதன் மூலம் “டைம்னர் கிராமம் சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளுக்குப் மின்சார வசதியை பெற்றுள்ளது.

Latest news