தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் சென்னையில் தொடங்கியது. இதில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தொகுதி மறுசீரமைப்பு நமது மாநிலங்களை வெகுவாக பாதிக்கப்போகிறது என்பதால் கடுமையாக எதிர்க்கிறோம். தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒரு போதும் ஏற்கக்கூடாது.
மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைந்தால் தமது நீதிக்கான குரலும் குறையும். மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால் தான் கூட்டாட்சி தன்மை நிலைத்திருக்கும். மணிப்பூர் மக்களின் குரலை கேட்க மத்திய அரசு தயாராக இல்லை என்றார்.