Tuesday, April 22, 2025

பீகாரில் மத்திய அமைச்சரின் சகோதரர் மகன் சுட்டுக்கொலை

பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ஜகஜித் யாதவ் மற்றும் விகல் யாதவ். இவர்களுக்குள் தண்ணீர் குழாய் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென இருவரும் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் விகல் யாதவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜகஜித் யாதவ் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் மந்திரி நித்யானந்த் ராயின் சகோதர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news