Tuesday, April 22, 2025

மீன் திருடியதாக கூறி, பெண்ணை மரத்தில் கட்டி தாக்கிய 3 பேர் கைது

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் மல்பே மீன்பிடி துறைமுகத்தில், பெண் ஒருவர் மீன் திருடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த 3 பேர், பெண்ணை மரத்தில் கட்டி தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ வெளியான நிலையில், பெண்ணை தாக்கிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ஒரு பெண்ணின் கை, கால்களைக் கட்டி இப்படி தாக்குவது மனிதாபிமானமற்றது என்றும் திருட்டு, மோசடியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் சட்டம் உள்ளது எனவும் உடுப்பி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் கண்டனம் தெரிவத்துள்ளார்.

Latest news