பிரபல இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், ப்ளிப்கார்ட் கிடங்குகளில் நடத்திய சோதனையில் ஏராளமான சான்று பெறாத பொருட்கள் பிடிபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள இ-காமர்ஸ் கிடங்குகளில் நடத்திய சோதனையில் ஏராளமான சான்றிதழ் பெறாத மின்சாதன பொருட்கள், உணவு மசாலாக்கள் என கோடிக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பொருட்களை இ-காமர்ஸ் நிறுவனம் மூலம் விற்றுவந்த நிறுவனங்கள் மீதும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.