டாஸ்மாக் மீதான ஊழல் புகார் குறித்து தமிழ்நாடு அரசுக்கு எதிராக தமிழக பாஜக சார்பில் சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்த திட்டமிட்டது. போராட்டத்துக்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை, மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் என்ன குற்றவாளியா? குற்றவாளி ஏறும் வண்டியில் நான் ஏறமாட்டேன். செந்தில் பாலாஜி என்ற குற்றவாளியை சிறையில் வைத்து, அவர் மீண்டும் இன்று வந்து குற்றம் செய்கிறார். செந்தில் பாலாஜியை கைது செய்ய உங்களுக்கு முதுகெலும்பு உண்டா? என ஆவேசமாக பேசினார்.
இதனால் அங்கு மாநகர பேருந்து கொண்டு வரப்பட்டு, அதில் ராஜா கைதாகி ஏறிச் சென்றார். தனியார் மண்டபத்தில் எச். ராஜா மற்றும் பாஜக நிர்வாகிகள் கைது செய்து அடைத்து வைத்துள்ளனர்.