சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த கையோடு, ரசிகர்கள் IPL மோடுக்கு தாவி விட்டனர். இதுநாள்வரை இந்தியா ஜெயிக்கணும் என்று பிரார்த்தித்த ரசிகர்கள், தற்போது கடவுளே என் டீம் தான் ஜெயிச்சு கப்ப தூக்கணும் என்று இஷ்ட தெய்வத்தினை வேண்டி வருகின்றனர்.
குறிப்பாக பெங்களூரு, லக்னோ, டெல்லி, பஞ்சாப் ஆகிய 4 அணிகளும், இன்னும் தங்களுடைய முதல் கோப்பையை முத்தமிடாததால், இந்த ஆண்டு வலுவாக வீரர்களை இறக்கி இருக்கின்றன. மறுபுறம் கடப்பாரை டீம் என அழைக்கப்படும் மும்பை, மஞ்சள் படை சென்னையை கோப்பை விஷயத்தில் முந்திட ஓவர்டைம் வேலை பார்த்து வருகிறது.
இந்தநிலையில் கடைசியாக கேப்டனை அறிவித்த டெல்லி அணியால், ரசிகர்கள் தற்போது Ex மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவை சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர். விஷயம் இதுதான். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ராகுலை கேப்டனாக்க அந்த அணி தீவிரம் காட்டியது.
ஆனால் லக்னோ அணியால் புண்பட்டிருந்த ராகுலோ, ‘ஒரு பிளேயரா மட்டும் இருந்துக்குறேன். நீங்க அக்சரையே கேப்டனாக்கிடுங்க,” என்று பெரிய கும்பிடு போட்டு விட்டார். இதையடுத்து தான் ஆல்ரவுண்டர் அக்சருக்கு கேப்டன் பதவி கிடைத்தது.
இதையடுத்து ராகுல் தன்னுடைய எக்ஸ் தளத்தில், ”வாழ்த்துகள் பாபு. இந்த பயணத்திற்கு வாழ்த்துகள். எப்போதும் உங்களுடன் இருப்போம்,” என அக்சரை வாழ்த்தி இருந்தார். இதுதான் தற்போது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு முன்னாள் மும்பை வீரரான ஹர்திக் பாண்டியாவை, மீண்டும் தாய்க்கழகத்துக்கு அழைத்து வந்த மும்பை, பரிசாக அவருக்கு கேப்டன் பதவியையும் கையோடு தூக்கிக் கொடுத்தது. இதற்கு அப்போதைய கேப்டன் ரோஹித் சர்மா ஒரு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை.
அதோடு ஹர்திக் பாண்டியா குறித்து ரோஹித்தின் மனைவி ரித்திகா பதிவிட்ட கருத்தால், மும்பை ரசிகர்கள் ஹர்திக்கின் மீது ‘டன்’ கணக்கில் வன்மத்தைக் கக்கினர். இது மட்டுமின்றி ஒவ்வொரு போட்டியின்போதும் ரசிகர்களிடம் இருந்து பெரும் கேலி, கிண்டல்களையும் ஹர்திக் சந்தித்தார்.
ரோஹித் நினைத்திருந்தால் ஹர்திக்கை சப்போர்ட் செய்து, ரசிகர்களின் கோபத்தை கண்ட்ரோல் செய்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படி எதையும் செய்யவில்லை. சொல்லப்போனால் சரியாக விளையாடாமல், மும்பை மிக விரைவாக தொடரினை விட்டு வெளியேறுவதற்கும் காரணமாக இருந்தார்.
இதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் தற்போது ரோஹித்திற்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள், ” ராகுல் கிட்ட இருந்து ஒரு பிளேயர் எப்படி இருக்கணும்னு கத்துக்கங்க. உங்கள மாதிரி ஒரு சுயநலவாதியான கிரிக்கெட் பிளேயர இந்திய டீம்ல பாக்க முடியாது,” என்று பலவாறாக அவரை விமர்சித்து வருகின்றனர்.