முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது பல்வேறு வழக்குகள் பதிவானது. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி சி.வி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி. சண்முகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஆளும் கட்சியை விமர்சிக்க உரிமை உள்ளதாகவும் அதனடிப்படையிலேயே பேசியதாகவும் அரசியல் பழிவாங்கும் வகையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் என்ற முறையில் சி.வி.சண்முகம் கவனமாக பேச வேண்டும் எனவும் உருவகேலி செய்யக்கூடாது எனவும் சி.வி சண்முகத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.