தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில், காலணிகளை குறி வைத்து, ஒரு கும்பல் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மூசராம்பாக் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு ஆட்டோவில் வந்த கும்பல், ஒவ்வொரு குடியிருப்பாக சென்று, மூட்டை மூட்டையாக ‘ஷூ’க்கள் மற்றும் காலணிகளை திருடி சென்றது. அங்கு வசித்து வந்த போலீசாரின் ‘ஷூ’க்களையும் விட்டுவைக்காமல் திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.