Friday, March 14, 2025

மாணவர்கள் முன்பு தோப்புக்கரணம் போட்ட தலைமை ஆசிரியர். என்ன நடந்தது?

ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவர்கள் முன்பு தலைமை ஆசிரியர் ஒருவர் தோப்புக்கரணம் போடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிக்க அவர் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மாணவர்களிடையே மாற்றத்தை வளர்ப்பதற்கான தலைமை ஆசிரியரின் தனித்துவமான முயற்சியை மனிதவள மேம்பாட்டு அமைச்சர் நாரா லோகேஷ் பாராட்டினார்.

Latest news