Wednesday, September 10, 2025

அ.தி.மு.க.வை பா.ஜ.க.விடம் அடகு வைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி – அமைச்சர் ரகுபதி விமர்சனம்

தமிழக உரிமைகளை தி.மு.க. அடகு வைத்ததாக கூறிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார்.

இது குறித்து அவர் பேசியதாவது : அ.தி.மு.க.வை நான்கரை ஆண்டுகள் பா.ஜ.க.விடம் அடகுவைத்துவிட்டு ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. தி.மு.க. அரசு எந்த வகையிலும் டெல்லிக்கு அடங்கியும் போகாது. அடமானமும் வைக்காது.

எங்களுக்கு சொந்த புத்தி உண்டு. சொந்த காலில் நிற்கும் சக்தி உண்டு. சொந்த மண்ணை காப்பாற்றும் திறமையும் உண்டு. நாங்கள் விவாதத்திற்கு தயார் என எத்தனையோ முறை சொல்லி விட்டோம். இ.பி.எஸ். அழைத்தால் நானே ஒரே மேடையில் விவாதிக்க தயார். இவ்வாறு அவர் கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News