அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, புதுக்கோட்டை மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா இருவரும் ஆஜராகாததால், வழக்கு விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.