Thursday, March 13, 2025

வட மாநில இளைஞர்களால் திருப்பூர் ரயில் நிலையத்தில் நிரம்பி வழியும் கூட்டம்

திருப்பூரில் ஹோலி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் வடமாநில இளைஞர்களால், ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

திருப்பூரில் சுமார் மூன்று லட்சம் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நாளை மறுநாள் ஹோலி பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால், சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.

வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் கூட்டம் இருந்ததால் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழில் ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Latest news